மனம் கலங்குதடி
நம் பிரிவுக்கு பிறகு
சில நாட்கள் கழித்து
இன்று
உன்னை
டதி மகளிர் மேல்நிலை பள்ளி
சாலையோரம்
உன்னை சந்தித்தேனடி ....
உன்னை கண்டதும்
எனக்குள் ஏற்பட்ட சந்தோசம்
நீ குழந்தையாக இந்த பூமியில் பிறக்கும்
போது உன் தாய் பட்ட சந்தோசத்தை விட அதிகமடி
என்னால்
அடக்கமுடியவில்லை அத்தனையும்
கண்ணீராய்
வடிய தொடங்கியது ....
ஏனடி
என்னை கண்டும்
காணாதபடி சென்றாய்
நான் என்ன தவறு செய்து விட்டேன்
எனக்கு ஏனடி இந்த தண்டனை ....
என் மனம் வலிக்குதடி ....
நான் உன்னையே
காண காத்திருக்கும் போது
என்னை கண்டதும்
உன் முகத்தை மறைத்து
யாரையோ போல என்னை கடந்து சென்று விட்டாயடி
மனம் வலிக்குதடி ....
உன் மேல் நான் கொண்ட காதலை
உன்னால் புரிந்து கொள்ள
முடியவில்லையா காதலி ....
அன்பே
உன்னால் என் மனம்
கலங்குதடி ....
நந்தி