மாமன் இதோ வாராண்டி - குமரி பையன்

கன்னி பெண்ணே நீ கையைத் தட்டு
கண்ணாடி வளையிட்டு கைத்தட்டு..!
பகல் தோழி பெண்ணோடு கைத்தட்டு
பரிசம் போட வாரான் கையைத் தட்டு..!

பட்டணம் போனவுன் மாமன் வாறான்
பட்டமும் படிச்சுட்டு பாய்ஞ்சு வாறான்..!
கண்டாங்கி சேலையும் வாங்கி வாறான்
கல்யாண பொண்ணுனை காணவாறான்..!

ஆனி முடிஞ்சாச்சு ஆவணி வந்தாச்சு
ஆட்டமும் பாட்டமும் வந்துடிச்சு..!
ஆசை கல்லியாணம் கண்ணிலு கண்டாச்சு
ஆனந்தம் பாடி நீ கைத்தட்டு..!

தாவணி போட்டு நீ பறந்தவளே
தாரமாய் அவனுக்கு போகப் போற..!
தங்கமே அவனோட நடக்க போற
தன்னோட மாருலே சேர்க்க போற..!

- (கன்னி பெண்ணே)

அத்தையின் சொல்படி நடந்திடணும்
அடுப்புலே சமையலும் பாத்துக்கணும்..!
அத்தானின் சுவை கேட்டு சமைச்சிடணும்
அப்பப்போ அவன் மேலே சாஞ்சிடணும்..!

இரவெல்லாம் அத்தானை கொஞ்சிடணும்
இளமையாய் உறவாடி தூங்கிடணும்..!
கோழி கூவும் முன்னே எழுந்திடணும்
கோல மயில் போல மாறிடணும் ..!

- (கன்னி பெண்ணே)

காலையில் வாசலில் கோலம் வேணும்
கதிரவன் வந்து அதை பாத்திடணும்..!
அத்தையும் மாமாவும் நாத்தனாருமவர்
அன்பால மனசுலே நுழைஞ்சிடணும்..!

தலையிலே மல்லியும் சூடிடணும்
தவறாம வாங்கிட சொல்லிடணும்..!
முந்தானை தும்புல முடிஞ்சிடணும் நீ
முத்தான குழந்தைய பெத்திடணும்..!

கைத்தட்டு பெண்ணே நீ கையைத் தட்டு
கண்ணாடி வளையிட்டு கையைத் தட்டு..!
கன்னி பெண்ணே நீ கையைத் தட்டு உன்
கல்யாணம் வந்தாச்சு கையைத் தட்டு..!

எழுதியவர் : குமரி பையன் (9-Dec-13, 12:14 am)
பார்வை : 650

மேலே