இயற்கையின் கிண்ணம்
![](https://eluthu.com/images/loading.gif)
மலர் தூவும் மாங்கனிக் காடு..
மலராத மூங்கில் கிளைகள்...
மகத்துவம் சொல்லும் காத்தில்..
மௌனத்தை பேசும் தென்றல்...
களையில்லா பயிர்கள் காட்டில்..
விளையில்லா கனிகள் கொட்டும்...
அலை அலையாய் ஆடும் மரங்கள்..
அனல் படர்ந்தாலும் சிரிக்குது பாரு...
விண்மீன்களே இதற்கு விளக்கு..
மலர்களிலே மின்னுது நிலவு...
தண்ணீர் பந்தல் மேகம்..
தாகம் தனிக்குது இழைகள்...
முல்லை கொடி ஏனோ..
முள்ளில் படர்ந்தால்தான் பூவோ...