கடற்கரையில் அவள்

அவள் பெயரைத்தான்

ஆண்டு ஆண்டுகாலமாய்
அலைகள் அழைக்கிறது
கடற்கரையில்

அவள் வருகிறாள் என்றதும்

அலைகள் அங்கும் இங்குமாய்
அலைந்து ஓடித்திரிகிறது
கடற்கரையில்

அவளை காண

அலைகள் ஒன்றோடு ஒன்று
முட்டி மோதி கொள்கிறது
கடற்கரையில்

அவள் வருவதை கண்டதும்

அலைகள் ஆர்பரித்து கொண்டு வருகிறது
கடற்கரையில்

அவள் அழகை காண

அலைகள் ஒன்றோடு ஒன்று
சண்டையிட்டு கொள்கிறது
கடற்கரையில்

அவள் பாதத்தை தொட்டுசெல்ல

அலைகள் போட்டி போட்டு கொள்கிறது
கடற்கரையில்

அவளை கண்டுவிட்ட அலைகள்

கும்மாளமடிக்கிறது
கடற்கரையில்

அவளை காணாத அலைகள்

அவள் எங்கே எங்கே என்று
சத்தமிடுகிறது
கடற்கரையில்

அவளை காணவேண்டி

சர்வதேச கப்பல் ஒன்று
தரைதட்டி நிற்கிறது
கடற்கரையில்

அவளை ரசிக்க

கட்டு மரங்கள் கட்டு கிடக்கிறது
கடற்கரையில்

அவள் வருகைக்காக

நண்டுகள் நெடு நாட்களாய்
நடந்து கொண்டு இருகிறது
கடற்கரையில்

அவள் வருகைக்காக

வானூர்திகள் வட்டமடிகிறது
கடற்கரையில்

இப்படியாய்

என்னவளின் அழகை
இயற்கையெல்லாம்
கண்டுரசித்தது
கடற்கரையில்

எழுதியவர் : கசிமுனியன் .க (9-Dec-13, 1:11 am)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : kadaRkaraiyil aval
பார்வை : 195

மேலே