என் வெற்றியின் முழுக் காரணம் - தோல்வியே

நினைவுகளைப் பெரிதாக்கு
நிச்சயம் வெற்றி உனக்கு....!
ஓவர் கான்பிடன்ஸ் தவறல்ல
ஒரு வகையில் அது பயிற்சி..!
துணிய வைத்தது முதலில் பின்பு
தோற்க வைத்தது உன்னை...!
இன்று உன் இதயத்தில்
இனிதாய் வந்த நிதானம்
எங்கிருந்து வந்தது
எனக்குச் சொல் நண்பனே......!
தோற்கவில்லை நீயடா
தொடங்கி விட்டாய் வாழ்வடா....
நினைவுகளைப் பெரிதாக்கு
நிச்சயம் வெற்றி உனக்கு....!