முடங்கி விடாதே - தொடங்கி விடு

இன்னும் வலுவுண்டு
இமயம் இத்துனூண்டு....!

ஒரு கால் நான் நம்பிக்கை இழந்திருந்தால் - என்
இரு காலும் இழந்திருக்கக் கூடும்....!!

இதோ சிகரமே....இன்னும் கொஞ்ச நேரத்தில்...என்
இனிய பாதங்கள்.....உனக்குக் கிரீடமாகும்....!

உன்னை நான் ஆசீர்வதிக்கையில் - இன்னும்
உயரவேண்டும் என்ற
உத்வேகம் உனக்குள் வரும்........!

கவலைப் படாதே
உனையும் நான் ஒரு அடி உயர்த்திக் காண்பிக்கிறேன்.........

எனது ஸ்டீல் லெக்கில் ஒன்றை பிரித்து

உன் உச்சந்தலையில் குத்தி வைத்து......

உன்னையும் நான் ஒரு அடி உயர்த்திக்
காண்பிக்கிறேன்.....

அதை விட ஒரு படி உயர - நிச்சயம் -

நாளை ஒருவருக்கு அது கைப்பிடி ஆகும்.....

இன்னும் வலுவுண்டு......

ஹ......

இமயம் இத்துனூண்டு....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (9-Dec-13, 5:30 am)
பார்வை : 93

மேலே