ஒரு துளி ஆனந்தம் 2

ஆனந்தம் என்பது
அற்புதமான,மகிழ்ச்சியான
அதிசய கடல் .
கரையில் உலாவி
சேர்த்த சில
சிப்பிகளை சிந்தனைகளை
நட்புகளே உங்களிடம்
அளவளாவுவதில் ஆனந்தம்
அடைகிறேன் .
(மாற்றுக் கருத்துகளையும் பதிவிடுங்கள் )
தெளிவிழந்த நினைவுச் சூழல்
.........................................................
அசாதாரண நிகழ்வுகளால்
வருத்தமான ,குழப்பமான
மன நிலையில் அகப்படும் போது
தெளிவிழந்த சூழலால்
சிக்கித்தவிக்க நேரிடலாம்
அதிலிருந்து விடுபடுதல் ,
அதுவும் உடனே ...என்பது
அவ்வளவு எளிதன்று .
ஆனாலும் விடுபடுதல்
மிக மிக அவசியம்.
"சங்கடமாய் உருவான
சூழலை மாற்றவேண்டும் எனில்
அதற்கு முன் சிந்தனையை
மாற்ற வேண்டும் ."
சிந்தனையை பிரச்சனைக்குள்ளிருந்து
வலிய விடுதலை செய்துவிட்டு ,
அதன் அடர்த்தியை வெளியிருந்து
சிறுக சிறுக அணுகும்போது
தெளிவு படிப்படியாக ,
புலப்பட ஆரம்பிக்கும்.
அப்படிப் புலப்படும்
தெளிவுப் படிகளில்
ஆனந்தம் துளித்துளியாக
மணம் வீசுதலை உணரலாம் ....