ஒருதுளி ஆனந்தம் 3
"அனுபவ நெருப்பிட்டு
நெகிழ் தன்மை புகுத்தி
நெருக்கடிக்குள்
அடிக்கப்படும்
இரும்பே (மனமே)
கூர் முனையாய்
(அறிவினில் தெளிவுபெறும்)
வடிவெடுக்கும்."
பிரச்சனைகளுக்குள்
வாழ்க்கை !
உண்டியில் சற்று
அதிகம் சேர்த்த
உப்பாகும்.
சமநிலைப்படுத்தாவிட்டால்,
பட்டினி உறுதி .
தெளிவு பெற்ற
மன நிலையில்
பட்டினியும் இருப்போமா?
பிரச்சனைகளால்
புத்தி கொள்முதல்
பெறுவோம் ,
வந்த பிரச்சனைகளால்
பட்ட துன்பத்தை
மறந்தாலும் ,
பெற்ற பாடத்தை
மறந்திடுவோமா?
"பெற்றதொரு கல்வி மனப்பழக்கம்"
ஒளவை
................
சொல்லறிவு ,பட்டறிவு
இவைகளை கல்வி என்போமா?
அல்லது
அனுபவம் என்போமா?