கிறுக்கல்கள்

தமிழ் நதிக்கரையில்
தவித்தேன், பருகினேன்
இலக்கியமென்றது
நதி நீர்.

மூளை குடத்தில்
அள்ளினேன், சிந்தினேன்
கவிதையென்றது
குடத்து நீர்.

-------------------------------------------

எந்த நொடியில்
எந்தன் மரணம் ?
மூச்சு உள்வாங்கி
வெளியிடும்போதா ?
வெளியிட்ட மூச்சு
உள்வாங்கும்போதா ?

-------------------------------------------

மரபு கிழவியை
கணினியில்
அலங்கரித்தேன்
அடடே !
புதுக்கவிதை குமரியிவள் !

-------------------------------------------
நாக்கு தாளில்
உருண்டோடிய குறுங்கவிதைகள்
நான் உண்ட சோறு !

--------------------------------------------

மணமுள்ள மல்லிகை
மயங்கி மலர்கிறது
மங்கையவள் கூந்தலில்...!

-------------------------------------------

கடற்கரை மணலில்
பதிந்த என்
பாதசுவடுகளை
எந்த அலை
பாவ கணக்குகளை
கழுவி விடுமோ?

-------------------------------------------
எதையோ சிந்திக்கிறேன்
எதை எதையோ எழுதுகிறேன்
எழுதுவது கவிதைதானா ?
யாப்பு இல்லை
இலக்கணம் இல்லை
சந்தம் இல்லை
சத்தம் இல்லை
என்னிடம் எதுவுமில்லை
நான் எழுதுவது கவிதைதானா ?
நான் கவிஞனா ?
----------------------------------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (9-Dec-13, 11:44 pm)
Tanglish : kirukkalkal
பார்வை : 616

மேலே