துணிச்சல் வேண்டும்
நான்கு வருடம் காதலித்த பெண்ணை ...
தூரத்தில் இருந்து ரசித்த பெண்ணை...
இதயத்தை ஏற்று கொள் என்று சொன்ன பெண்ணை...
இதய தேவதையாய் வைத்திருக்கும் பெண்ணை...
இல்லறத்திற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.....
இதையும் அதையும் சொல்லி திருமணத்தை தடுத்துவிட்டார்கள்....
இதயம் இல்லாமல் எங்களால் வாழ முடியாது...
இனி உங்களை நம்பி வாழ்க்கையை வீணடிக்க முடியாது....
இருங்கி விட்டோம் நீங்கள் சொன்ன " இதையும் அதையும் " தூக்கி எரிந்து விட்டு ........
அவளுக்கு நான் எனக்கு அவள் என வாழ போகிறோம்...
வருவதை காதலை கொண்டு எதிர்த்து நிற்க போகிறோம்...
எங்கள் காதல் ஜெயிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...
சரித்திரம் படைக்கும் "காதல்" என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை...
யாரோடும் யார் வேண்டுமானாலும் வாழலாம் ...
இதில் "அதுவும் இதுவும்" இல்லாமல் இதயம் சேரலாம்...
எதிர்நீச்சல் போடும் எங்கள் காதல்...
கடலில் முத்தெடுக்கும் எங்கள் காதல்...
...
..
.. துணிச்சல் காதல்....