சீக்கிரம் என்னிடம் வந்துவிடு

அழுத விழிகளோடு காலையில்
தோலை பேசி எடுத்து பார்கையில்
உன் மின்னஞ்சல் எதுவும் இல்லை
கண்ணை மூடி உன்னை நினைக்கையில்
வலிக்கிறது நெஞ்சம்
என் மனதை கிழிக்கின்றது
நாம் சேர்ந்து இருந்த கடைசி நிமிடங்கள்
கொஞ்சி பேசிய நேரங்கள்
செல்லாமாய் சண்டை போட்ட நிமிடங்கள்
கோபத்தில் கொட்டி தீர்த்த வார்த்தைகள்
பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட தருணங்கள்
மறுபடி சமாதானத்தில் ஒன்று சேர்ந்த உணர்வுகள்
முத்தம் கொடுத்து பரிமாறி கொண்ட பொழுதுகள்
உரிமையாய் உறவாடிய கணங்கள்
எதுவுமே என் மனத்தை விட்டு இன்னும் விலகவில்லை
கணம் கணம் என் நினைவில் வந்து
என்னை கொன்று கொண்டிருக்கின்றன
சீக்கிரம் என்னிடம் வந்துவிடு
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்