வாழ்கை பாதையை திரும்பி பாக்கிறேன்
அன்று மகிழ்ச்சியில் பூத்து குலுங்கிய நாட்கள்........இன்று..?
கிழிந்த சைக்கிள் டையர் ஓடிய ஆர்வம் இன்று புது பைக் ஓடும்போது இல்லை
பட்டம் விடும்போது இருந்த மகிழ்ச்சி இன்று படித்து பட்டம் வாங்கும்போது இல்லை
பை நிறைய கோலி குண்டுகள் நிரம்பியபோது வந்த புன்னகை இன்று பை நிறைய பணம் சேரும்போது இல்லை
நண்பர்கல்லோடு தெருவில் உட்கார்ந்திருந்த சுகம் இன்று எ சி ரூமில் அமரும்போது இல்லை
பம்செடில் குளித்த சந்தோசம் இன்று ஜகுவர் ஷவரில் குளிக்கும்போது இல்லை
வானொலியில் கேட்ட பாடலின் சுகம் இன்று ஹோம் தேட்டரில் இல்லை
நாள் புரா தண்டித்த வாத்தியாரின் மேல் இருக்கும் கோவத்தை மறுகணமே மறந்த பெருந்தன்மை இன்று பக்கத்து வீட்டுக்காரன் உன் வீட்டு வாசலில் வண்டி நிறுத்தும்போது இல்லை
பள்ளி கல்லூரிகளில் நண்பனுக்கு பிரச்சனை என்று கேள்விபட்டதும் ஓடிபோய் முன்னே நின்ற நாம் இன்று நண்பனே பிரச்சனை என்று தேடி வரும்போது அவன் பக்கத்தில் கூட நிற்பதில்லை
இன்று நம்மை சுற்றி வசதிகள் உண்டு அனால் சுவாரசியம் இல்லை...........