வானளவு மகிழலாம்

வளர்ந்த நாற்றுக்கள்
வரப்பில் நடக்கிறது !
பள்ளிக்கு பயணமாய்
பசுமையில் பாதமிட்டு !

விளைந்திட்ட பயிரும்
வளமான நெற்கதிராகும் !
வளர்த்திட்ட அறிவும்
வாழ்வில் பயனாகும் !

தடமாறா பாதையினில்
பயணித்தால் நல்வாழ்வு !
தடுமாறா நெஞ்சங்கள்
நிலைகுலையா வாழ்வே !

வருங்காலத் தலைமுறையே
வாழ்வும் சிறந்திடவே என்றும்
வாழும் உலகிற்கும் பயனானால்
வானளவு மகிழலாம் நிச்சயம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (11-Dec-13, 2:25 pm)
பார்வை : 389

மேலே