பாரதி நீ வாழ்க
 
 
            	    
                எட்டயபுரத்து மைந்தன்
நாட்டுப்பற்று கவிஞன் -இவன்
ஊட்டிய சிந்தனை சத்து
இயற்றிய வரிகள் தமிழ்ப்பற்று
ஆணாதிக்கத்தை சிறைப்பிடித்து
பெண்ணுரிமையை மீட்டெடுத்த
தமிழ் தாயின் தங்கமகன்.
வீர மையிட்டு எழுதிய
இவன் அக்னி வரிகளுக்கு 
எரிமலைகளும் நடுங்கியது
வெள்ளைக்கார அரசும் அஞ்சியது
கோழையின் பிடியில் அடிமையான
ஏழை மக்கள் செல்வங்களுக்கு 
இவன் எழுதிய பாடல்களே 
புத்துணர்வு கொடுத்த புரட்சி உணவு
மகாகவி சுப்ரமணிய பாரதியே !
இதோ நீயென் நெஞ்சில் வாழ்கிறாய்
இந்த பூமி அழிந்தாலும் 
வேற்று கிரகத்திலும் புத்துணர்ச்சியாக 
வெளுத்து வாங்கும் உந்தன் பாடல்கள். 
வாழ்க உன் புகழ் !
----------------------------------------------------------------------------
இரா.சந்தோஷ் குமார்
 
                     
	    
                
