என் தாய்த் திரு நாடு

கவின் மிகு மலையும்
நீலவண்ணக் கடலும்
நீண்டமணற் பரப்பும்
பசுமையான நிலமும்
நெடிதுயரந்த மரங்களும்
கொட்டும் அருவிகளும்
சலனமின்றி ஓடும் ஆறுகளும்
அமைதியான மக்களும்
நிறைந்த தமிழ் நாட்டிலே
செம் மொழி பேசும் போதினில்
கனிந்துருகி அழகான நடையிலே
அருமையான சொற்களிலே
நெக்குருகி பாடிய பாடல்கள்
எத்தனை எத்தனையோ
திருவாசகத் தெள்ளமுது
உருகாத மனத்தையும் உருக்க
தேவார சொல்லமுது
மனதில் நுழைந்து பரவசமுட்ட
தெய்விகம் கமழும் இத் திரு நாட்டிலே
விஞ்சும் அருளுனர்வும்
எஞ்சும் நெறி முறைகளும்
நெஞ்சை சொக்க வைக்க
என் தாய் திரு நாடு இதுவே
என்று பெருமிதம் கொண்டு
வலம் வரும் என் போன்றோர்க்கு
எளிமையான வாழ்வு எழுத்தால் வலிமை
பேச்சால் சுகம் விளைய இதம் தவழ
வேண்டும் என்று வேண்டி நிற்கிறேன்
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி

எழுதியவர் : மீனா somasundaram (11-Dec-13, 10:40 pm)
பார்வை : 434

மேலே