கும்மியடிப் பெண்ணே கும்மியடி
சந்தம்
தந்தனன தன தந்தனன தன
தந்தனனத் தன தந்தனனனா;
தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தன தானன தந்தனனா;
கும்மியடிப் பெண்ணே கும்மியடி அழகு
குமரிப் பெண்ணே நீ கும்மியடி
மங்கள கோலத்த மத்தியில் போட்டுட்டு
மங்கையர் மங்கையே கும்மியடீ ....(கும்மி....)
தைத்திங்களும் வருகுது பொங்கலும் வருகுது
தையல் ஆடையுடுத்தி நீகும்மியடீ
நெய்பொங்கல இறக்கி மத்தியில் வச்சிட்டு
நங்கையர் நங்கையே கும்மியடீ ....(கும்மி....)
வாசலுல நெல்ல சேர்த்துவச்சி அது
வந்த க(தை)தசொல்லி கும்மியடீ
வண்டியில வந்த மச்சான் பார்த்ததும்
வளை(ந்து)ஞ்சி குனிஞ்சி கும்மியடீ ....(கும்மி....)
தங்கத் தமிழுல பாட்டுக்கட்டீ-தந்த
பாட்டியோட அந்த மெட்டுக்கட்டி
சந்திர சூரியன் சாட்ச்சி வச்சி
சாயுங்கால நேரமா கும்மியடி ....(கும்மி....)
நாடு செழிக்கத்தான் போகுதுன்னு அட
நல்ல மழைபெய்ய வேணுமுன்னு
உரலுலக் குத்தின பூரியரிசிய
வாசலுல வச்சி கும்மியடீ ....(கும்மி....)
‘உம் பாட்டுல,.. கேளு,...பெண்ணே...’
குயிலுந்த்தான் பதிலுக்கு பாடுமடி குட்டி
முயலும்தான் தோட்டதில் தாவுமடீ
பட்டுப் பாவாடைய சேர்த்துச் சொருகி
பத்தோடுப் பதினொன்னா கும்மியடீ ....(கும்மி....)
தாழம்பூவ நீயும் தலையில் வச்சி
வாழப்பூவடைய தட்டில் வச்சி
ஆரிப்போகு முன்னே மாமன் வரனுன்னு
ஆசை யாசையா நீகும்மியடீ ....(கும்மி....)
தாள ஞால முள்ள தமிழச்சியே
கால நேரம்வரும் உ(ன்னை)னமெச்சியே
பள்ளி படிப்புள சொல்லி யடிச்சநீ
கள்ளிப்பால் கதயொழிக்க கும்மியடீ ....(கும்மி....)
இவன்,
ர.ஷங்கர்