நடனமாடுகிற ஆடுகள்

நடனமாடுகிற ஆடுகளும்
அதிக உரோமங்கள் கொண்ட ஆடுகளின்
காவல் நாய்களும் கூட்டமாக வருகிறபோது
தம் குழந்தைகளை வெளியேயிறக்க சம்மதிக்கா பெற்றோர்கள்

குழந்தைகள் கரைந்துகொண்டிருக்கிறன
என்ற பயம்

மழை காலமது
மழை காலமது

மழை காலமதில் மதுக்கடையில் ஒரேயொரு சிறிய கோப்பையில் மதுவெடுத்து அருந்திக்கொண்டு பெய்து பெய்து பலகோப்பை மதுவைக்குடித்தாற்போலிருக்கும்

மழைக்காரனை போய்
பொய் சொலென்றால்
அவன் ஒருகாலமும் பொய் சொல்லப்போவதில்லை

அவர்கள்
குழந்தைகளின் பெற்றோர்கள்,
குழந்தைகள்

மழைக்காரனை கழுத்தில் பிடித்து
மதிலில் அணைத்து
நண்பனை முத்தமிடுவதுபோல் இட்டு
பின் கழுத்தை நெரித்துக் கொல்லவது

சி கேவலம்
பிணத்தைப் புசிப்பதுபோன்றது

அவர்கள் கொடியவர்கள்
மழையைக் கொல்லும் அனுமதி கொடுத்ததாரு
கொலை செய்து ஓயா மழையது

போதை தெளியட்டும்
இருந்தும் புத்தி கலங்குகிறதே

எத்தனை அழுக்கிருக்கிறது புத்தியில்
அப்போ அது புத்தியல்ல ஊத்தை

அவனொரு ஊத்தைகுடியன்
என்று பாட்டுகளும்பாடி நடனமாடுகின்றன ஆடுகள்

வயிறு காட்டி, பாதி மார்பு காட்டி

ஏனது போதையிலிறங்கியது மார்புக்குள் புத்தி
ஓ அவன் புத்திமானாம் புள்ளிமானில்லையா?



எழுதியவர் : பைசால் இலங்கை (30-Jan-11, 9:24 pm)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 376

மேலே