மழையும் அவளின் குடையும்

அவள்
குடை தேடிக்கொண்டிருந்தாள்
அவளை நனைப்பதற்குத்தான்
மழையே வந்திருந்தது ...

அவள்
உணவருந்தும்போது
சிந்தும் சிருபருக்கைகளுக்காக
கதவோரமாய் ஒளிந்தபடியே
வரிசையில் காத்துக்கொண்டிருந்தன
எறும்புகள் ...

அவள்
தேநீரை சுவைக்கையில்
அவள் இதழ்சுவையை
ருசித்துக்கொண்டிருந்தது
தேநீர் கோப்பை ...

அவள்
மிதிவண்டியில் செல்கையில்
சாலையை கவனிக்காமல்
அவளை பார்த்தபடியே
உருளுகின்றன
மிதிவண்டியின் சக்கரங்கள்...

அவள்
கூந்தல் வாசனையில்
கிரங்கிப்போகிறது
அவள் சூடியிருக்கும்
மல்லிகை பூக்கள் ....

அவள்
வந்து அமர்ந்தபின்தான்
தன் பெருமை உணர்கிறது
மாநகர பேருந்தின்
பெண்கள் இருக்கை...

அவளை
இருக்க அணைத்தபடி
அவள் உறங்குவதை
பார்த்தபடியே விழித்திருக்கிறது
தலையணை...

அவள்
எழுத்துக்கூட்டி உச்சரித்தபோதே
செம்மொழி அந்தஸ்தை
பெற்றுவிட்டது
தமிழ் ...

எழுதியவர் : அருண் (12-Dec-13, 1:04 pm)
பார்வை : 354

மேலே