துணிவு கொள்ளடா
துணிவு கொள்ளடா..
கள்ளம் கொண்ட
உள்ளம் செய்யும்
பள்ளம் அடைபடா திருட்டு
வெள்ளம் பாயும் இருட்டு உலகமடா தம்பி
கள்ளம் துடைக்கத் துணிவு கொள்ளடா..
உள்வாயில் நஞ்சு ஊசி வைத்து
வெளிவாயில் கொஞ்சிப் பேசும் திருட்டு
வெள்ளம் பாயும் இருட்டு உலகமடா தம்பி
கள்ளம் துடைக்க துணிவு கொள்ளடா...
இறை பெயர் சொல்லி
குறை செயல் செய்யும் திருட்டு
வெள்ளம் பாயும் இருட்டு உலகமடா தம்பி
கள்ளம் துடைக்க துணிவு கொள்ளடா...
மேடையில் முழங்கும் ஒருமையைப்
பாடையில் ஏற்றி சகமனிதரைக் கீழோராக்கும் திருட்டு
வெள்ளம் பாயும் இருட்டு உலகமடா தம்பி
கள்ளம் துடைக்க துணிவு கொள்ளடா...
கொடுக்கும் வாக்கு பொய்யது போல்
எடுக்கும் வாக்கும் உண்மையிலா கள்ளஓட்டெனும் திருட்டு
வெள்ளம் பாயும் இருட்டு உலகமடா தம்பி
கள்ளம் துடைக்க துணிவு கொள்ளடா...
மாற்றும் உடைமுதல் எதற்கும் லஞ்சமென பிடுங்கி
ஏமாற்றும் பணமுதலைகள் உலவும் திருட்டு
வெள்ளம் பாயும் இருட்டு உலகமடா தம்பி
கள்ளம் துடைக்க துணிவு கொள்ளடா...
இல்லாதோர் நிறைந்திருக்க பொருள்
இருப்போர் குறைவிலாது பொருள்பதுக்கும் திருட்டு
வெள்ளம் பாயும் இருட்டு உலகமடா தம்பி
கள்ளம் துடைக்க துணிவு கொள்ளடா...
... நாகினி