சினிமா அன்றும் இன்றும்
அன்று
ஆயிரம் அர்த்தங்கள் கொண்டு
அடுக்குமொழி பேசிய காவியங்கள்
எடுப்பான உடையும் மிடுக்கான நடையும் கொண்டு வேங்கை போன்ற குரலோடு வீரமேற்றிய கதாநாயகர்கள்
வரலாற்றுனாயகர்களின் வீரப்புகழ் பாடிய திரைப்படங்கள்
பாடல்களால் மக்களின் பித்தம் தெளித்து புத்தி சொன்ன கவிஞர்கள்
இன்று
நண்பர்கள் சேர்ந்து 'குடிக்கும்' காட்சிகள்
கதைனாயகனுக்கு வேலை இல்லை என்பதை ஏதோ பெரிய சாதனை போல காட்டப்படும் கன்றாவிகள்
தொடை தெரிய உடை உடுத்தும் கதாநாயகி
சிலேடை வசனங்கள்
உறவுகளை கொச்சை படுத்தும் நகைச்சுவை
தந்தைக்கு பீர் வாங்கி கொடுக்கும் மகள்
இப்படி உலக உபத்திரவங்களை
பொழுபோக்கு என்ற பெயரால்
உள்ளத்தினுள் சேர்கிறது
இன்றைய சினிமா.
குறிப்பு:
மாற்றுக்கருத்துகள் வரவேற்கபடுகின்றன.