திருடர்கள்

சாவியின்றிப் பூட்டைத் திறக்கும்
இரகசியம் தெரிந்தவர்கள்
பண்ட பாத்திரம் களவாடுவது
பழமையாப் போனதால் வெட்கப்பட்டு
வெள்ளிப் பொருட்களுக்கு மட்டும்
விதிவிலக்கு.அளிப்பவர்கள்.
கட்டுக் கட்டாய் ரூபாய் நோட்டு
தங்கம் வைர நகைகளே
கொத்தியிழுக்கும் அவர்கள் கண்களை.
வழிகாட்ட வேண்டியவர்களே
பகற்கொள்ளை யடிப்பதால்
இவர்களில் சிலருக்கோமுகமூடியும்
தேவைப்படுகிறது.
- திருடனுக்குத் திருடன் நண்பன்-
தேவைப்பட்டால் கூடஇருந்தே
கொலையும்
செய்யும் கொள்கையாளர்கள்