காதல் கல்வியும் தரும் கல்லறையும் தரும்

நாலுவரி கவிதை எழுத முனைந்து
நான் பட்ட துயரம் என்ன சொல்ல...?
பேனா காகிதத்தை கொன்றுகுவித்து
குப்பைத்தொட்டியில்
வீசிக்கொண்டிருந்தது....!
கடைசியில்
உனைப்பார்த்தேன் காதல் கொண்டேன்....
காகிதம் பேனாவை முத்தமிட்டது
கவிதை பிறந்தது நான் கவிஞன் ஆனேன்...
காதல் பெருமை சேர்த்தது
என் தமிழுக்கும் தமிழாசிரியைக்கும்
காதலியுங்கள் கவிஞன் ஆகலாம்...!

எழுதியவர் : நா.நிரோஷ் (14-Dec-13, 7:55 pm)
சேர்த்தது : கவிநிலவு
பார்வை : 759

மேலே