காலை வணக்கம்

காலை வணக்கம் ......
---------------------
நிலவிடம் ஆதவன்
வரம் கேட்டான்
இரவு முழுவதும் நீ தானே
இதமான ஒளிவீசினாய் ?
பகல் எனக்காகட்டும் என்று !

பரவாயில்லை எடுத்துகொள்
ஒரு பனிரெண்டு மணியை என்றது .!
பகலவனுக்கு
பரம சந்தோசம் !
மெல்லென தன் ஒளிமுகத்தை
காட்டினான்
பகலாய் மலர்ந்தது !
இழுத்து போர்த்திய போர்வை
விலக எழுந்தான் அருண்.........!
இன்றைய பொழுது
இனிதாய் இருக்கட்டும் என்று !
அனைவருக்கும் காலை வணக்கம்

எழுதியவர் : (14-Dec-13, 8:03 pm)
சேர்த்தது : m arun
Tanglish : kaalai vaNakkam
பார்வை : 100

மேலே