உள்ளத்தால் இணைவது அறுபது

சொந்தக் கவிதை -4
மேகத்தை தூது விட்டேன் இன்றைய
அன்னத்தையும் தூது விட்டேன் பலனில்லை!
எண்ணத்தில் நிறைந்தவள் பிடிகொடுக்கவில்லை
இன்றுமுடிவுடன் அவளிடம் கேட்டுவிட்டேன்
வீட்டுக்கு எப்போதுவருவாய் நீ என்று ?
குழந்தை பிறந்ததும் வருவேன் என்றவள்
இன்று பேரன் முகம் பார்த்து சிரிகின்றனாம்!
நான் யார் முகம் பார்த்து சிரிப்பதுஎனக்கேட்டேன்?
பேரன் தவழ்ந்ததும்வந்து வந்துவிடுவேன் என்றாள்
எல்லோரையும் அழைத்து வா என்றேன்
மகள் சொன்னாளாம் விடுப்பில்லை அவர்களுக்கு
அவள்வந்தால் அவர் தவித்துப் போய்விடுவாராம்!
அடியேய் மண்டு மகளிடம் கேட்டுப் படிஎன்றென்
அவர்கள் வாழ வேண்டிய சிறுசுகள்
நாம் வாழ்ந்து முடித்த பெருசுகள் என்றாள்
நானோ உள்ளத்தால் இணைவது அறுபது என்றதும்
நான் இருந்தபோது தெரியவில்லை எனதருமை
இப்போது மட்டும் புலம்புவது ஏன் எனக்கேட்டாள்?
பதில் சொல்லுமுன் இருங்கள் பேரன் விழித்துவிட்டான்
எனக் கூறி இணைப்பையே துண் டித்துஓடி விட்டாள்!