ஜாதகம் பார்க்கிறான்
நேரம் சரியில்லை ஜாதகம் பார்க்கிறான்
புரோகிதம் படித்தவர் பிரித்து மேய்கிறார்
எது எதுக்கு உரியது எந்த கட்டமென்று
கிரகங்களின் இருப்பிடத்தை ஆய்ந்து அறிகிறார் ....
தன்னிடத்தை விட்டுவிட்டு தப்பான இடம்தேடி
எத்தனையோ கிரகங்கள் இடம்பெயர்ந்து இருக்கையிலே
கூட்டு சேர்ந்த கிரகங்களில் கூட்டும் சரியில்லே
குழப்பிவிட்டு அனுப்பினார் படித்துபார்த்த புரோகிதர் .....
போகும்போது குழம்பிப்போன
புத்தியோடு போனவன்
திரும்பும்போது தெளிவடைந்தான்
அறிவளவில் விழித்துக்கொண்டான் ..........
நம்கூட்டே சரியில்லே நல்லவரோடு நாமிள்ளே
சரியான நபரோடு சகவாசம் நமக்கிள்ளே
நமக்குவந்த தொல்லைக்கு நாம்தானே காரணம்ன்னு
நல்லாவே புரிந்துகொண்டான் வாழ்க்கைதனை அறிந்துகொண்டான் ..