மழைகாலம்

வானமிங்கே சிரித்திட
வளையோசை கேட்டிட
பூமியெங்கும் பெளர்ணமியாய்
பூமாரி பொழிகிறதே
புத்தாடை உடுத்திய புதுபெண்ணாய்
புத்துணர்வுடன் நாணி கேணி நகைக்கிறதே வானுயர்ந்த மரங்களெல்லாம்
வண்ணச் செடியில் வகையாய் ஒளிந்த
பூக்கள் தலைதூக்கி வரவேற்கிறதே
வசந்தத்தின் வரவிதனை
தாவும் அணிலும் மேவும் மயிலும்
ராகதாளமின்றி கவிபாடும் பட்ஷிகளும் ரீங்காரமிடும் வண்டுகளும் ராட்சஷ வல்லூறும்
புத்துணர்வுடன் புகழ்பாடுதே
களைத்திருந்த நிலங்களெல்லாம்
தழைத்திடும் பசுமை கொண்டு
பச்சாடை உடுத்தும் பாக்கியம் பெற்றதே
ஆறு குளம் குட்டையெல்லாம் ஆர்பரிக்குதே
அழகிய மீன்களெல்லாம் துள்ளி மகிழுதே
நர்த்தனங்கள் நகைக்கிறதே
சொப்பனங்கள் சுவைக்கிறதே
சுபராகம் இசைக்கிறதே ...