காதல்னா காதல்தான்

அவள் ஊமை விழிகளில்
உணர்வுகளின் ஸ்பரிசம்
கண்கள் பேசிக்கொண்டன

பூ விழிகளுக்குள்
நான் புலம்பிப் போனேன்
அவள் கேசங்களில்
நைல் நதியின் நெளிவுகள்
பூ சூட்டிய அவள் கூந்தலில்
பாவிசைக்கும் வண்டுகள்
மை தீட்டிய கண்களுக்குள்
நான் மாய்ந்து போனேன்

கனவுகளில் கூட
அவள் கண்களின் ஸ்பரிசம்

நாங்கள் ஊடல் கொண்ட போது
பேசா மடந்தையாய் அவள்
செயலற்ற நிலையில் நான்

நெஞ்சங்கள் மட்டும் நினைத்துக்கொண்டன
நெஞ்சங்களின் நெகிழ்வுதான் காதலா!
காதல்னா! காதல்தான்.

எழுதியவர் : பொ.பொற்செழியன் (15-Dec-13, 11:11 am)
சேர்த்தது : porchezhian
பார்வை : 97

மேலே