தவறிழைத்த

பிய்த்துத் தகர்த்த பின்பே
வருடலும் சிலிர்த்தலுமாய்
தழுவிச் சென்று
மன்றாடுகிறது காற்று..!!!
கூட்டுப் பறவைகளிடம்..!!

வக்கிரங்கள் வழித்துதிர்த்த
பின்பே
தளர்வும் தலைகுனிவுமாய்
வல்லுறவின்
வலியுணர்ந்து மண்டியிடுகிறது
விந்தணுக்கள்....!!!

கனமழைகளாய் கரைத்துக்
குடித்தே பின்பே
சொட்டுச் சகதிகளில்
ஈரம் பார்க்கிறது.... மழை
குடிசைச் சுவர் குழையங்களின்
அழிவுத் தடங்களுக்கு...!!!

காற்றும் கனமழையும்
உருவமில்லா ஓர்
உயிரணுவும் கூட
ஒரு நொடி பிறழ்கிறது
தவறுகள் நினைந்து....

இன்னும் அப்படியே
இருக்கிறது....
ஆள்காட்டிவிரல் மை
அடையாளமும்..!!!
அதுகழிந்த
மதுஒழுகல் கடைவாயும்...!!!

எழுதியவர் : சரவணா (15-Dec-13, 6:11 pm)
பார்வை : 103

மேலே