வளம் தருவாயா வாழ்வு தருவாயா

வளம் தருவாயா
வாழ்வு தருவாயா

என நான் அறியாப் பொழுதில்
பசுங்கன்றென பதியமாகிறாய்

என் நிலத்தின் ......உறவுக்குள் புகுந்து

மண் சரியோ..மனம் சரியோ
எனப் பாரபட்சம் ஆராயாமல்

முத்து முத்து பூத்த
முத்தங்கள் ஒளித்து

நாளொன்றுக்கு
இணைந்து பிரிந்து

இதழ் வேர்த்து
இளமை விரித்து

காய் விட்டு
காம்பு நீள்கிறாயடி
பருவம் குளித்து....

தாய்மை பூரிப்படைய
என்னையும் குழந்தையென தாங்கி

என் தவறுகள் பொறுத்து
ஆங்காரங்கள் அணைத்து

அதிகாரங்கள் தலைகோதி
ஆளுமைகள் மடியேந்தி

என்னையும் பதியமிடுகிறாய்
உன் பொறுமையின் வழிகளில்

உன்னைப் புரியும் அன்பை
உன் மேலான மதிப்பை
உன் தியாகங்களை

இரத்தம் சுருங்கி
ஆளுமைகள் ஓய்வடையும்
வயதின் 50 களிலேயே போதே
தீர்க்கமாய் ஒத்துக் கொள்கிறதடி.....என் திமிர்

வாழ்த்தாத போது
கடமையென களைப்புறாமல்

பெருமையென சிறப்புற்று
என் வம்சம் வளர்க்க....என் வாழையென

மண்ணில் நான் மான்புற
என் மனைவியென வந்த
தாலாட்டு தெய்வமே...

எழுதியவர் : m.palani samy (15-Dec-13, 7:18 pm)
பார்வை : 99

மேலே