என்னைப் பெத்தவனை பெற்றவளே

தந்தையென கற்றுக் கொடுத்தாய்

விழிக்கும் முன் விழிக்கிறாய்
சிணுங்கும் முன் அணைக்கிறாய்

தோழமையாய் வந்து..
என் எல்லாவற்றிலும்
நீயுமாகிறாய் நானாய்....

பொறுக்க முடியா என்குறும்புகளில்
தாங்க முடியா என் சேட்டைகளில்

என் மேல் விழும் அடிகளை
நீ உள்விழுந்து தாங்கிக் கொள்கிறாய்

என் கள்ளத்தனங்களை
யாருக்கும் தெரியாமல்
நீ மட்டும் மிரட்டிஎச்சரிக்கிறாய்.....

உன் சுருங்கிய தோல்மென்மையில்
மேன்மையுறுகிறது

என்னில் வளரும் முரட்டுத் தனங்கள்

உனக்கும் எனக்குமான
நட்புறவு ..இறைவனோடு திமிரும்
இளங்காளை உறவுகள்....

நீ யார் என நான் புரியும் முன் ....

என்னைப் பெத்தவனே பெத்தவனே என
அன்பு முத்தக் கொஞ்சலாடி
உடலெல்லாம் உருவி உருவி விட்டு

என்னை தூக்கி தூக்கி
தலையில் ஏத்திக் கொண்டாடுகிறேயடி

என் அழகு முதுமையாய்........

எழுதியவர் : m.palani samy (15-Dec-13, 7:08 pm)
பார்வை : 77

மேலே