உயிரே எந்தன் உறவே

காதலில் தோல்வியுற்ற காதலன் வெளிநாட்டில் இருந்து காதலிக்கு எழுதுகிறான்........................

விழிக்கும் விடியலை விட
உறங்கும் இருளையே விரும்புகிறேன்
நேரில் பார்க்க முடியாத உன்னை
கனவிலாவது காணலாம் என்று!

வாசித்த கவிதையும், ஒலித்த பாடலும்
நினைவில் நிற்கவில்லை
நினைவில் நின்றதும், வந்ததும்
உந்தன் ஒளியும், ஒளியும் மட்டுமே!

மலரின் வாசமும் அன்பரின் பாசமும்
ஒரு நாழிகை கூட உணரவில்லை
காலம் மறந்து, எல்லைகள் படர்ந்து
உணர்ந்தது உந்தன் உணர்வை மட்டுமே!

நீ எனக்கில்லை என்பதை உணர்ந்தும்
உறவுக்காக உயிரை வதைக்கிறேன்
உள்ளத்தில் கலந்த நீ
உறவில் கலக்கப் போவது எப்போது?

உள்ளம் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்-என்று
பொய் சொல்ல தூண்டுகிறேன் மனதை
கடல் கடந்து, மலை தாண்டி காண்பது
எப்போது..............

எழுதியவர் : செ. தினேஷ்குமார் (15-Dec-13, 7:51 pm)
Tanglish : uyire yenthan urave
பார்வை : 341

மேலே