அண்ணாச்சி கடை

பார்த்த மாத்திரத்தில் வரவேற்பாய் ஒரு புன்சிரிப்பு
நம் குடும்ப நபர்களின் நலன் விசாரிப்பு
தமது குடும்பத்தில் உள்ள நல்லது கெட்டதுகளை
ஒவ்வொரு நபரிடமும் விவரிக்கும்
ஓர் அந்யோனியம்
வருவோர்களிடம் பைசா கொஞ்சம் குறைவாய் இருந்தாலும் மறுமுறை வருகையில் வாங்கிகொள்ளும் மாண்பு
அண்ணே,மதினி என்று உறவு கொண்டாடும்
சொந்தம் போன்ற பேச்சு
இவையாவும் கிடைக்கும் பத்து ரூபாய்க்கு
பலசரக்கு வாங்குவோருக்கும்
அண்ணாச்சி கடையில்.

கிடைக்குமா?
பத்தாயிரம் ரூபாய்க்கு பர்சேஸ் செய்தாலும்
சில்லறை வணிக கார்ப்பரேட்டுகளில்.

எழுதியவர் : துரைவாணன் (15-Dec-13, 9:57 pm)
Tanglish : annachi kadai
பார்வை : 132

மேலே