மழையும் மழலையும்

முற்றத்தில் வந்து
முத்தமிட்டு போன
மழைச் சாரலைப் பார்த்துக்
கேட்டது மழலை .....
இது வந்துவந்து
எங்கு போகிறது என
அம்மா வீட்டுக்கு போகிறது எனச்
சொன்ன பதிலுக்கு
தொடுத்த கேள்விக்கணை
அம்மா .....
மழை மட்டும்
அடிக்கடி அம்மா வீட்டில்
நான் மட்டும் ஏன் அப்படி இல்லை?
என் விழிகளில் அப்பொது மாமழை...