அழகானது

அருவிபோல் அடித்து கொட்டும்
அடைமழையின் அழகை விட
துளித்துளியாய் விழும் மழைச்சாரல்
மனதிற்கு சுகமோடு அழகானது

ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த
வாசனை திரவியத்தின் வாசத்தை விட
மலர்ந்திருந்து மணம் பரப்பும் ஓர் தோட்டத்து மல்லிகையின் மணம் மனதிற்கு சுகமானது

இனிப்பு என எடுத்த சுத்தமான
தேனின் சுவையை விட
அளவோடு தேனிட்டு செய்த
தேன்மிட்டாயின் சுவை இனியது

பின்னிய கூந்தலில் சூடிய
முழம் முழமான பூவை விட
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும்
ஒற்றை ரோஜா தனி அழகு

பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில் வாழும் வசதி ஆடம்பர வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும்
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு ..

...கவியாழினி ...

எழுதியவர் : கவியாழினி (18-Dec-13, 10:27 am)
Tanglish : azhagaanathu
பார்வை : 155

மேலே