வீணை

முன்னழகும் பின்னழகும்
மூளைக்குள் இசை மீட்டும்...!

நினைவுக்கும் விரல் முளைக்க
நீ மீட்டு எனச் சொல்லும்.....!

நிசப்தமான சிணுங்கல் ரசனைக்குள்
நிம்மதியான நிரவல்.....!

தந்திகள் மயிலிறகோ அதன் மேல்
தாவும் விரல் கவி வரியோ...?!

கவி இசை இயற்ற நினைத்தேன்
கவனம் திசை மாறுகிறதே...ஹையோ...

கீர வாணி என்ற புனித ராகம் - என்
கிறுக்கலில் சேதமுறக் கூடும்

அதற்குள்

எனை எனக்குத் திருப்பிக் கொடு
எழில் வீணையே எங்கேயடி நான்....?!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Dec-13, 6:13 pm)
Tanglish : veenai
பார்வை : 236

மேலே