1947 2014 அதே காலண்டர் அப்படீன்னா

67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம்.

புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான். அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன.

67 ஆண்டுகளுக்குப் பின் 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு.

புதன்கிழமை பிறக்கும் ஜனவரி 1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. அதாவது இரு ஆண்டுகளிலும் ஜனவரி 1ம் தேதி புதன்கிழமை வருகிறது. மற்ற தேதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

அதே தேதிகள், அதே கிழமைகள் அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்துப் பார்த்தால், அப்படியே 2014 ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். தேதிகளும், கிழமைகளும் ஒரே மாதிரியாக இல்லை.. இது போதாதா...

1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரமைடந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனவே அதேபோன்ற மாற்றத்தை 2014ம் ஆண்டு இந்தியா மீண்டும் சந்திக்கும் என்று பலர் கணித்துக் கூறியுள்ளனர்.

இப்போது 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருவதால், இந்த ஆண்டில் இந்தியா பெரும் மாற்றத்தைக் காணும் என்றும் இவர்கள் கிலி கிளப்புகின்றனர்.

என்ன மாற்றம் வருகிறதோ, என்னவோ.. முதலில் வருடம் நல்லபடியாக பிறக்கட்டும். என்ன வருதுன்னுதான் பார்த்து விடுவோமே...

நன்றி தமிழ் .ஒனெஇண்டிஅ .இன்
அமர்க்களம்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (18-Dec-13, 7:22 pm)
பார்வை : 111

மேலே