அன்பில் பால் அனைத்தும் அடங்கும்
இந்த வாழ்க்கை பயணத்தில் "அன்பு" என்ற இந்த சின்ன எழுத்து உயிரும் மெய்யுமாய் எத்தனை பாடங்களை நமக்கு சொல்லி கொடுக்கிறது... இந்த அன்பு தான் எத்தனை முரணானது ???
அணைப்பு, ஆறுதல் , உவகை, உந்துதல், நம்பிக்கை, சிரிப்பு, கனவு, மற்றும் பலமாக இருக்கும் அதே அன்பு ,, பல நேரங்களில் அலைகழிப்பு, அவமானம், அத்துமீறல், கவலை, கண்ணீர், மனகசப்பு, மற்றும் பலவீனமாகே மாறிபோகிறது !!
அம்மாவின் அணைப்பில் கதகதப்பான முத்தங்கள் மூலம் நமக்கு முதல்முதலில் பரிச்சயம் ஆகும் அன்பு அப்பாவின் அருகாமை, உடன்பிறப்புகளின் அரவணைப்புகள் , நட்புவட்டத்தின் சிநேகம் என்று நம்முடனே விரித்து வளர்கிறது அதன் எல்லைகளை.. பருவத்தில் காரணங்கள் இல்லாமல் நாம் கவர்ந்து காதலில் கசிந்து, பின்பு திருமணம், அதன் பால் விரிவடையும் வட்டம்.. ஆக அந்த வட்டத்தில் உள்ள அனைவரின் மீதும் அன்பு. நாம் நேசிக்கும் நபர் நேசிக்கும் உறவுகளையும் நாம் சேர்ந்தே சுமக்கிறோம்.
ரேவா பக்கங்களில் ரேவா சொல்வது போல், அவர்களை அவர்கள் விருப்பங்களோடு சுமக்கிறோம்ம்.. அத்தகைய பயணங்களில் நாம் மாறியும் போக நேர்கிறது.
அன்பின் பால் நாம் கொடுக்கும் உரிமைகளை.. சில நேரம் அடக்குமுறைகளை தொடுக்க படுகின்றன...
அதீத அன்பில் நம் மேல் உள்ள அக்கறையால் நமக்கு பிடிக்காதவையும் திணிக்கபடுகிறது....
எத்தனை பேர் நம் கனவுகளை நம் குழந்தைகளின் முதுகில் ஏற்றி ஓட விடுகிறோம்..
எத்தனையோ இளைஞர்கள் பெற்றோர் பால் உள்ள அன்பால் தம் கனவுகளின் குறிப்புகளை அடுத்த ஜென்ம அட்டவணைகளில் நிரப்பி கொண்டுஇருக்கிறார்கள்
.
எத்தனை பெண்கள் அன்பில் பால் ,, நம்பிக்கை துரோகங்களை தூக்கிகொண்டு..மறைத்து சிரிக்கிறார்கள்??
பிரியமானவர்கள் தொடுக்கும் சொல் அம்புகளையும் தாங்கியே செல்கிறோம்..
மீண்டும் தொடுப்போமானால் ,,அவர்களின் ரணங்களின் வலிகளும் நமக்கே.
.
அமிலங்கள் அருந்த கொடுத்து,, உமிழ் நீரிலும் தேனை எதிர்பார்ப்பதும்,,
சிலுவைகளை அவர்களே தந்து சிரிக்கவும் சொல்கிறார்கள்...
அன்பு அனைத்தையும் ...கடக்கும்,,, நமது காயங்களை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்...
மறப்பது மன்னிப்பது ,, தெய்வகுனமாகும் என்று..
மனிதனாக வாழவிடாமல் ,, கடுவுள் ஆக்க முயன்று நம் காயங்களுக்கும் அவர்களே மருந்திடுகிறார்கள்...
சில நேரம் மனிதனாகி அழுவதும்,, சில நேரம் கடவுளாகி சிரிப்பதுமாய் ,,நகர்ந்துகொண்டிருக்கிறது நம் வாழ்கையும்...
ஏனெனில்.....
மாற்றங்கள் பிரியமானவர்களிடமே....,,
நம்
ப்ரியங்கள் என்னமோ தொடர்கின்றன......
அன்பின் பாதையில் அலைவோம் அப்பாவி அப்பாடக்கர்களாய் .....
ஏனெனில்...
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!!!!!!!!!!!!!!!!!!!!!