தலைவர் கொஞ்சம் சபல கேஸ்
காலேஜ் பசங்க யாருமே அந்தபடத்துக்கு ஏன் போக
மாட்டேகிறாங்க..?
-
இது படம் அல்ல, பாடம்'னு விளம்பரம் பண்ணாங்களாம்..!
-
>வி.சாரதி டேச்சு
-
-------------------------------------------------
-
மன்னா...தங்களுக்கும் மகாராணிக்கும் ஏதும் பிரசைனையா?
-
ஏன் புலவரே?
-
தங்களைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்று செல்லும்போதெல்லாம்
'எதுக்குய்யா, இந்த மானங்கெட்ட பொழைப்பு'னு என்னை
கேட்கிறாங்க...!
-
>தஞ்சை தாமு
-
------------------------------------------------------
-
தலைவர் கொஞ்சம் சபல கேஸ்...!
-
இருக்கட்டும்ங்க....அதுக்காக பொன்னாடைக்கு பதிலா
தாவணியா போர்த்தறது...!
-
>வி.சகிதா முருகன்
-