போர் களம்

மனிதன் மிருகமாக
மாறி - மனித
உயிர்கள்
பரிதாபமாக
பறிக்கப்படும்
களம்....

உயிரை சூறையாடி
மனித நேயத்தை

புதைத்து....

குருதியை
நதியாக்கி - தனது
தாகத்தை
தீர்த்துக்கொள்ளும்
களம்....

ஈனக்குரல்களின்
முழக்கம்...

காண்பவர்க்கு...!

வேதனை உண்டாக்கும்
மயான களம்....

கழுகுகூட்டங்கள்
ஒன்று கூடி
மனித உயிர்களை
ருசிபார்க்கும்
களம்....

விலைமதிக்க
முடியாத உயிரை
பறிகொடுக்கும்
பரிதாமம்
நிறைந்த களம்....

யுத்தத்தின்
முடிவை
இறந்தவர்கள்
மட்டும்
கண்டு கொண்ட
களம்....!


"போர் களம்"

எழுதியவர் : லெத்தீப் (19-Dec-13, 7:40 pm)
Tanglish : por kalam
பார்வை : 227

மேலே