மனிதம் வளர்ப்போம்

வீட்டிற்கோர் மரம் வளர்த்து
மண்ணள்ளி போட்டுவிட்டோம்,
இனி வீட்டிற்கொரு
மனிதமாவது வளர்ப்போம்

ஈராயிரம் வருடங்கள்
விதை தேடினோம் - இன்று
ஊன்றி வைப்போம் - இன்னுமொரு
ஆயிரத்திற்குள்ளாவது வளரட்டும்,

ஊழலின்றி விதை வாங்குங்கள்
செவ்வாயிலாவது நட்டிவைப்போம்
அங்காவது அதை (மனிதம்)
களையாதிருப்பார்கள்,

மனிதம் வளர்க்கும் முன்
சாதியில்லா மண்ணைக்
கண்டறியுங்கள் இல்லாவிடில்
பட்டுப் போய் விடும்
தப்பித் தவறி வளர்ந்த அந்த
மனித நேய மரங்கள்

சந்தன மரங்களை வெட்டியதுபோல்
மனித நேயத்தையும் வெட்ட
விட்டுவிடாதீர்கள இவை இங்கு
அதிகம் தேவை,

இந்த நூற்றாண்டிற்குள்ளேயே
வாங்கி விடுங்கள் இல்லையேனில்
அதுவும் விற்கப்பட்டுவிடும்
கருப்புப் பணங்களுக்கு

அரசியல் வியாதிகளுக்கு மட்டும்
விற்றுவிடாதீர்கள் அந்த மனிதமும்
பினாமிகளாய் மாறி விடும்

மனிதம் வளர்ப்போம் !
மனிதர்களாய் மாறுவதற்கு! !

எழுதியவர் : (19-Dec-13, 8:37 pm)
Tanglish : manitham valarppom
பார்வை : 1009

மேலே