அவமானங்களே அடையாளங்களாய்
கொப்பரைத் தேங்காயின்
மூடிகளில் குழம்பிகள்
செவிப்பறையைத் தீய்க்கும் வார்த்தைகள்
உச்சியில் சுருக்கெனும்
அச்சிலேற்ற இயலா வர்ணனைகள்
அவமானங்களே அடையாளங்களாய்,
உருப்பினை காப்பதற்காய்,
செருப்பினை துறந்த கூட்டம்
கற்பினை விலைபேசும்
ஆலமரத்தடி அதிகாரம்
புலியிட்ட வண்ணமாய் உடல் கொண்ட
இளவல்களின் தேகங்கள்
இடுப்பினில் இறங்கியே கிடைக்கும்
எங்கள் தோளங்கிகள்,
சட்டைகள் சலவையிட்டு
பெட்டிகளிலே பத்திரமாய்