கலைவாணர் இன்றிருந்தால்

ஆசை அறுபது நாட்கள் அந்தக்காலம்
காதல் அறுபது நாட்கள் இந்தக்காலம்
மோகம் முப்பது நாட்கள் அந்தக்காலம்
வாழ்க்கையே முப்பது நாட்கள் இந்தக்காலம்

குழந்தைகள் தோப்பாய் வளர்ந்தது அந்தக்காலம்
குழந்தை தனிமரமாய் வளர்வது இந்தக்காலம்
அன்னையும் பிதாவுடன் கூடிவாழ்ந்தது அந்தக்காலம்
அன்னையும் பிதாவும் தனியே வாழ்வது இந்தக்காலம்

கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தது அந்தக்காலம்
தனிக் குடும்பமாய் ஒடுங்கியது இந்தக்காலம்
நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தது அந்தக்காலம்
தனக்காக நாட்டையே அர்ப்பணிப்பது இந்தக்காலம்

கணவன் பெயரை சொல்லாதது அந்தக்காலம்
கணவனை வாடா போடா எனச் சொல்வது இந்தக்காலம்
மனைவியை பொருட்டாக நினைக்காதது அந்தக்காலம்
கணவன்மனைவி நிரந்தரமில்லை என நினைக்குது இந்தக்காலம்

உழைப்பால் உயர்ந்து மகிழ்ந்தது அந்தக்காலம்
பணத்தால் மதியாது வாழ்கிறது இந்தக்காலம்
கடன் வாங்கத் தயங்கியது அந்தக்காலம்
கடன் வாங்கி ஒளிவது இந்தக்காலம்

வீழ்ந்தால் மீண்டும் எழுவது அந்தக்காலம்
ஒருமுறை வீழ்ந்தால் தளர்வது இந்தக்காலம்
குழந்தையுடன் கிணத்தில் குதிப்பது அந்தக்காலம்
குழந்தையுடன் அடுக்கு மாடியிலிருந்து குதிப்பது இந்தக்காலம்

அடுத்தவர் தயவில் வாழ்ந்தது அந்தக்காலம்
தன்காலில் நிற்க நினைப்பது இந்தக்காலம்
அந்தக்காலம்இந்தக்காலம் இரண்டிலுமுண்டு சிறப்புக்கள்
வாழும்சிலநாள் மகிழ்வுடன் வாழ்வதே மானிடற்குஅழகு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (19-Dec-13, 9:06 pm)
பார்வை : 97

மேலே