படித்ததில் பிடித்தது 3

மதுரைக்காரர்கள் மிகவும் பாசமானவர்கள் என்று சைக்கிளிலேயே உலக சுற்றுப்பயணம் செய்யும் நெதர்லாந்து சுற்றுலா பயணி தெரிவித்துள்ளார் !!
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ராபர்ட் ஜான்(53) இவருக்கு சைக்கிளில் உலகை வலம் வருவது மிகவும் பிடித்தமான ஒன்று.
இதுதவிர நீச்சல், பனிச்சறுக்கு உள்ளிட்ட விடயங்களில் ஆர்வம் உள்ளவர். கடந்த நவம்பர் மாதம் இந்தியா வந்துள்ளார். நாட்டின் முக்கிய இடங்களை சைக்கிளிலேயே வலம் வந்த இவர் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியே சைக்கிளில் சென்று வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்களின் வாழ்க்கை முறை பற்றியும் அறிந்து வருகிறார்.
தமிழகத்தை வலம் வருவதற்காக வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார். செல்லும் வழியில் மானாமதுரை சென்ற அவரை. பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து ராபர்ட் கூறுகையில், தமிழக மக்கள் அன்பானவர்கள், இதுவரை சென்ற மாநிலங்களிலேயே தமிழகம் தான் அமைதியாக உள்ளது. அதிலும் மதுரை மக்கள் மிகவும் பாசமானவர்கள் என்று கூறியுள்ளார்.
சைக்கிளில் பல்வேறு வசதிகளுடன் வலம் வரும் இவர் பொதுமக்களிடம் அவர்களின் உணவு பழக்கவழக்கம் குறித்தும் கேட்டறிகிறார். இன்னும் ஒரு மாதம் இந்தியாவில் இருக்க உள்ளதாகவும் அதற்குள் பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.