தானே அழிவேன்

உன் உண்ணாவிரதம் என்னை
============கொன்றுவிடுமா ?
மசோதாவிற்கு பயந்து மயானம்
============செல்வேனா ?

எதற்கிந்த போராட்டம்
ஏனிந்த தனிச்சட்டம் ?
உன்னால் உருவான -நான்
உன்சட்டதால் அழிவேனா ?

பகட்டு வாழ்க்கையைத் தவிர்
பாமரனாய் வாழ்ந்து சாதி .
போதுமென்ற மனதைப் பெறு
ஏழையை ஏய்த்துப் பிழைக்காதே .

சட்டத்தையும் சட்ட திருத்தத்தையும்
நீதி தேவதையின் கையில்கொடு
நீதியை முடக்கி வைத்து
என் வரவை எதிர்நோக்கியுள்ள
உன் சட்டப்பையை கிழித்தெறி .

கோடியில் புரள நினைக்காதே- ஏழைக்கு
உதவும் கல்வியை பணமாக்காதே
மனிதத்தை மதி என்னை மிதி
நானாக அழிந்து விடுவேன்
தானாக மடிந்து விடுவேன் ...

என்னிறப்பில் பாரதத்தில் நல்லரசே !
பாரதம் வல்லரசே !வல்லரசே !

எழுதியவர் : ப்ரியாராம் (20-Dec-13, 3:52 pm)
Tanglish : thaane azhiven
பார்வை : 77

மேலே