இரண்டுத் தாய் தாயும் தமிழும்
இருண்டதாய்
இருந்த என் வாழ்க்கை
இரண்டுத் தாய் விளக்கேற்றினாள்
ஒருதாய்
உயிர்க் கொடுத்தாள்
ஒருதாய்
உணர்வுக்கொடுத்தாள்.
உயிர்க்கொடுத்தத் தாயால்
உருவம் பெற்றேன்.
உணர்வுக்கொடுத்தத் தாயால்
உற்சாகம் பெற்றேன்.
உயிரைக் கொடுத்தவள் - தன்
உயிரை அடக்கிகொண்டாள்.
உணர்வுக் கொடுத்தவள் - தன்னுள்
உயிராய் அடக்கிகொண்டாள்.
உயிர்க் கொடுத்தத் தாயுடன்
வாழும்போது வறுமை தாண்டவமாடியது.
உணர்வுக் கொடுத்தத் தாயுடன்
உலவும் போது எண்ணங்கள் தாண்டவமாடுது.
வறுமையிலும் அந்தத் தாய் - எனக்கு
வயிறார உணவளித்தாள்.
வற்றாத சொல்லழகை இந்தத்தாய் - எனக்கு
வரமாக உவந்தளித்தாள்.
உறவுக் கொடுத்த ஒரு தாய்
உறங்கிவிட்டாள்.
உறவாய் வருகின்ற ஒருதாய்
உறக்கத்திலும் விழிக்க வைத்தாள்.
உடன் பிறப்புடன்
உறவுத் தந்தாள் அந்தத்தாய்.
உடன் பிறப்பாகவும்
உறவுத் தந்து வாழ வைக்கின்றாள் இந்தத் தாய்.
தாய் அவளுக்குத் தமிழ் தெரியும்.
தமிழ்த் தாயான இவளுக்கு என்னையும் தெரியும்.
அதனால்தான்
கருவில் சுமந்த அந்தத் தாயால் வந்தவனுக்கு
கருவாகவும் கருத்தாகவும் இந்தத் தாய்
கவனித்து வாழ வைத்து வருகின்றாள்.
அந்தத் தாய் தந்த உறவில் பிரிவுகள் இருக்கும்.
இந்தத் தாய் தந்த உறவில் விரிவுகள் இருக்கும்.
இந்த இரண்டு தாயாரின்
தயவுகள் எனக்கு என்றும் இருக்கும்.
என்போல் உங்களுக்கும் இருந்தால்
என்றுமே இன்பங்கள் தொடர்ந்திருக்கும்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
