மீண்டும் இணைவாயா என்னோடு
பூவான இதயத்தினுள்
புயலாக வந்தாய்..!!!
இருண்ட விழிகளுக்கு
ஒளியாக வந்தாய்..!!!
வானம் நிலவை சுமப்பது போல
மனதில் உன்னை சுமக்க வைத்தாய்..!!!
தரிசான என் வாழ்க்கையில்
உன் நினைவை
விதையாக விதைத்தாய்..!!!
அழியாத சுவடாக
உன் வருகை
தடம் பதித்து சென்றது..!!!
மீண்டும் இணைவாயா
என்னோடு
தடயத்தை அழிக்கும்
தண்ணீராகி ..???