உணர்ச்சியற்ற உறவே
கண்ணே என்றேன்
கண்ணீராய் கடந்து சென்றாய் .....
தென்றலே என்றேன்
புயலாய் வீசி போனாய் ......
உறவே என்றேன்
அறவே இல்லை என்றாய் .....
கனவே என்றேன்
காலையில் கலைந்து விட்டாய் ....
கடவுளே என்றேன்
கருங்கல்லாய் நின்றாய் ......