பருவம் இரண்டு -- இரண்டாம் மரணம்

நொடிந்துபோன அவன் தொடர்ந்து வாழலானான்
செய்தது செய்வது புரியாமல் அவன்!

பள்ளிக்குப் போனால் இத்தகு காதல் மனு
வருமென்று அவள் தந்தை கூறியது
அவள் மனதில் மீண்டும் ஒலித்தது!

பொய்சொல்லி நிராகரித்துத் தப்பித்தோம்
என்றே நினைத்துத் தற்காலிக நிம்மதியானாள்!

நாட்கள் நகர்ந்தது
அவன் காதல் அவனை மாற்றவில்லை
அவனும் அவன் காதலை மாற்றிக்கொள்ளவில்லை!
ஆனாலும் அவளைத் தொடரவும் இல்லை!

அவ்வப்போது பார்வைகள் வீசுவது மட்டுமே
ஆனால் அவளுக்கு அபிப்ராயம் ஏதுமில்லை
ஏற்றிவிட நண்பர்கள் வேறு!
அவனின் ஒவ்வொரு உணர்வுகளிலும்
அவள் ஊறிப்போயிருந்தாள்!

அவளின் வாழ்க்கைச் சூழலைப்பற்றித்
தெரிந்தகொண்ட அவனுக்கு அவள் யாரையும்
காதலிக்கவில்லை என்றே நன்றாய் புரிந்தது
அது அவனை மேலும் ஊக்கப்படுத்தியது!

பள்ளிப்பருவம் முடியுங்காலம் நெருங்கியது
தன்காதலை மீண்டும் வலியுருத்த
அவன் திட்டமிட்டான் இம்முறை அழுத்தமாக!

அன்று காலை பள்ளிச்செல்லும் நேரம்
முடிவு தெரிய வேண்டுமென்ற முடிவோடு
சென்றவன் வழிமறித்து காதலைச் சொன்னான்

பயந்தவள் அவ்விடம் அகல முயற்சிக்க
திடுக்கன்று அவள் கையை அவன் பற்ற
உதறிவிட்டு வேகமாய் ஒடலானாள்

பள்ளிவாகனம் பரபரப்புடன் நால்வழிச் சந்திப்பில்
திரும்ப அவளும் அங்கே திரும்ப
சட்டென்று மோதியது, வீழ்ந்தாள்...!

பின்தொடர்ந்த அவன்
இரத்தவெள்ளத்தில் அவள்
உயிருக்குப் போராடுவது அவள்
இரண்டாம் மரணத்தில் அவன்!

எழுதியவர் : அலெக்சாண்டர் (21-Dec-13, 1:19 am)
பார்வை : 57

மேலே