தாய்மை வியாபாரம் அல்ல
கருமுட்டைகள்
கடைத்தெருவை முந்துகிறது
கருவறைகளும்
கமர்சியல் கலந்த
விற்பனை அறைகளாய்
அறம் இழந்து இருக்கிறது - ஆனால்
சுட்டாலும்
விற்றாலும்
விலை கொடுத்து வாங்கினாலும்
தாயாகலாம் - நிச்சயம்
தாய்மை ஒட்டாது
தாய்மை என்பது வரம்
வியாபாரம் அல்ல ...!