காதல் தேருக்குள் ஓர் ஊர்வலம்

இடைவெளி இல்லா பேருந்தில்
ஏதோ ஓர் மூலையில் நான் இருக்க..
நீ பிடித்து வரும் கம்பி
உன் ஒவ்வொரு அசைவின் அதிர்வையும்
ஒரு சேர எடுத்து வந்து
என்னிடம் சமர்பிக்கும் உயிர் கடத்தி..

உனக்காக எனக்குள்ளே
உயிர்த்து எழும் நினைவுகள் எல்லாம்..
திரண்டு வந்து நிற்கின்றது
பேருந்தின் வெறுமை எல்லாம் அடைத்தவாறு..
இங்கு உன்னைத் தவிர மற்றவை எல்லாம் எனக்கு வெற்றிடமே..

புன்னகை பூவின் அலங்கரிப்பில்
சின்னச் சின்ன பேச்சிலே பாட்டிசைத்து
வளையல்கள் இசை கூட்ட
விழிகளில் ஒளி நடனம் ஆடுகின்றாய்..

தார் சாலை தேர் வீதி ஆகிறது
உன்னை சுமந்து வரும் பேருந்து
தேர் என்பதால்..

அதில் தொற்றிக்கொண்டு வர
இந்த சிறுவனுக்கும்
கொஞ்சம் இடம் கிடைத்ததால்
அந்த சொர்க்கம் சேர்கின்றேன்..

வாசல் வரை வந்து நிற்கும்
இந்த காதல் பக்தனுக்கு
உன் கடை விழி பார்வை கொண்டு
முக்தி கொடு பெண்ணே..!!

நானும் முழு மனிதன் ஆவேன்..!!

எழுதியவர் : வெ கண்ணன் (21-Dec-13, 3:05 pm)
சேர்த்தது : வெ கண்ணன்
பார்வை : 99

மேலே